சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

கர்ப்பகால சர்க்கரை



கர்ப்பகால சர்க்கரை நாளுக்கு நாள் அதிகமாக என்ன காரணம்?
1.      திருமண வயது – முன்பை விட அதிகம்
2.      உடல் எடை – முன்பை விட அதிகம்
3.      உடற்பயிற்சி இல்லாதது,சத்தில்லாத சக்கையான உணவு சாப்பிடுவது,அளவுக்கு அதிகமான உணவு சாப்பிடுவது,நார் சத்துள்ள உணவுகளை சாப்பிடாதது,கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவது
4.      பெற்றோர்களுக்கு சர்க்கரை இருப்பது
5.      கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்,குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகமாக சாப்பிடுவது,மலட்டுத்தன்மைக்கு சிகிச்சைக்கு பெற்று ஹார்மோன் மாத்திரை சாப்பிடுவது ஒரு முக்கிய காரணம்
கர்ப்பகாலத்தில் சர்க்கரை அதிகம் இருந்தால் குழந்தைக்கு உண்டாகும் பாதிப்புகள்
முதல் 3 மாதம்     - உடல் ஊனம், பிறவி கோளாறுகள்
4- 6 மாதங்களில்    - மூளை வளர்ச்சியின்மை
7 – 9 மாதங்களில்  - அதிக எடையுள்ள குழந்;தை,சுவாச பிரச்சனையுள்ள குழந்தை.
அதே போல் பிறக்கும் குழந்தைக்கு தாழ்நிலை சர்க்கரை ,மஞ்கள் காமாலை,போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது.இது தவிர குழந்தையுடைய ஆரோக்கியமே கேள்விக்குறியாக மாறி விடுகிறது. உச்சகட்டமாக தாயின் சர்க்கரை நோய் கண்டுபிடிக்கப்படாமல் போகும் போது குழந்தை வயிற்றிலேயே இறந்தும் பிறக்கலாம். அல்லது பிறந்து இறக்கலாம்
டீயமநசள ர்லிழவாநளளை குழநவயட ழுசபைin ழக னளைநயளந அதாவது கர்ப்ப காலத்தில் சர்க்கரை இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் அதிக எடை,சர்க்கரை நோய்,இருதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது இந்த கோட்பாடு.அப்படி பார்த்தால் சிறிய வயதிலேயே அதிய சர்க்கரை உள்ளவர்களை நாம் சந்திக்க நேரிடும்.
என்ன செய்ய வேண்டும்?
கர்ப்பம் அடைந்தவுடன் சர்க்கரை உள்ளதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பிறகு 4 வது மாதத்திலும் 7 வது மாதத்திலும் பரிசோதனை செய்ய வேண்டும்,இவர்கள் மருத்துவமனைக்கு வரும்; போது(எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை) 50 கி குளுக்கோஸ் கொடுத்து 1 மணி நேரம் கழித்து ளிழவ வநளவ செய்ய வேண்டும்.
140 மி.கி கீழ் -சர்க்கரை இல்லை
140 மி.கி மேல் - புவுவு (குளுக்கோஸ் தாங்குதிறன் பரிசோதனை அவசியம்)
விழிப்புணர்வு அவசியம்
ஆரோக்கிய உணவு பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.பரிசோதனை அதைவிட முக்கியம்.நண்பர்களே உங்கள் மருமகள்,மகள் அல்லது பேத்தி கர்ப்பமாக இருந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

No comments:

Post a Comment