சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள்:



சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள்:
கண்களும் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து தப்புவதில்லை.இடையிலே வந்த இந்த கொடிய நோயினால் பார்வை பறி போவது என்பது எவ்வளவு துயரம்?
சரி என்ன காரணம்? சொல்லாமல் கொல்லும் சர்க்;கரை எப்படி கண் பார்வையை பறிக்கிறது?
நமது கண்களின் உட்புறம் இறுதியில் உள்ள விழித்திரைக்குள் பல மெல்லிய இரத்தக் குழாய்கள் சந்திக்கின்;றன.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது முதலில் பாதிக்கப்படும் இரத்தக் குழாய்கள் இவையே. இதனையே விழித்திரை வலுவிழப்பு(சநவinழியவால) என்பார்கள். சர்க்கரை நோய் தாக்கப்பட்டுள்ளவர்களுக்கு பலருக்கு லேசான பார்வை கோளாறுகளும்,சிலருக்கு கடும் பாதிப்பாக பார்வையிழப்பு கூட ஏற்படலாம்.
சுர்க்கரை நோயினால் குறைவான அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை நாளங்கள் வலுவிழந்து வீங்கிப் பெருத்து அல்லது கொழுப்புப் படிவுகளுடன் காணப்படுகிறது.இதுவே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு,விழித்திரையில் உள்ள அமல்லிய நாளங்கள் பாதிப்படைந்து அவற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பின் அடைபடும்.உறுதியற்ற புதிய இரத்த நாளங்கள்  விழித்திரையில் உண்டாகும்.அவையும் எளிதில் உடைந்து இரத்தக்கசிவு ஏற்படும்.இரத்தக்கசிவு அதிகமானாலும்,விழித்திரையின் முக்கியப் பாகங்களில் ஏற்பட்டாலும் பார்வையிழப்பு ஏற்படும்.புதிய இரத்த நாளங்களில் தழும்புத் திசுக்கள் ஏற்;பட்டு அவை விழித்திரையை இழுத்தோ விலக்கியோ பார்வைக் குறைவை ஏற்படுத்தலாம்.
சரி இதற்கு என்ன தீர்வு..?
முறையாக சர்க்;கரை பரிசோதனை மட்டுமல்லாமல்,கண் பரிசோதனையையும் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதற்கு முன்னர் ஆரம்ப கட்டடத்திலேயே கண்டறிய முடியும்.கசியும் இரத்தக் குழாய்களை லேசர் சிகிச்சை மூலம் உறைய வைக்க முடியும்.
தழும்புததிசுக்களால் விழித்திரை விலகல் ஏற்படும் போது,அறுவை சிகிச்சை செய்து மீண்டும் விழித்திரையை ஒட்ட வைக்க முடியும்.

No comments:

Post a Comment