சர்க்கரை நோய்

Loading

Wednesday, April 17, 2013

சர்க்கரை நோய் - விழிப்புணர்வு பிரவுச்சர்கள்

நமது சக்கரை சிகிச்சை மையத்தின் சர்க்கரை நோய் - விழிப்புணர்வு பிரவுச்சர்கள் 


Thursday, August 9, 2012

இனிப்பு நோயின் கசப்பு முகம் புத்தகம்


இனிப்பு  நோயின்  கசப்பு முகம் புத்தகம் 
வேண்டுபவர்கள்  கிழ்க்கண்ட ஈமெயில் க்கு  தங்கள் முகவரியை அனுப்பி வைக்கவும் .

புத்தகவிலை ருபாய் 50
குரியர் செலவு 20
மொத்தம் 70 ருபாய் அனுப்பப்  வேண்டும் 

dr.nithyacbe@gmail.com


Tuesday, February 14, 2012

இரத்த அணுக்கள்- சுவாசம்

மனித உடலில் 96,000 கி.மீ. இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இரத்தத்தில் பிளாஸ்மா. சிவப்பு அணுக்கள வெள்ளை அணுக்கள் பிளாடிலெட்ஸ் போன்றவைகள் அடங்கி யுள்ளன. ஒவ்வொரு வினாடியும் 80 லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் எலும்பு மஞ்iஜயில் உற்பத்தி ஆகிறது.

ஹீமோகுளோபினில் அது 54 ஒரு அளவியில்3 4 முதல் 6 மில்லியன் சிவப்பு அணுக்கள் காணப்படும். பிளாடிலெட்ஸ் ஒரு அளவியில்  3 லட்சம் வரை இருக்கும்.

சுவாசம்

ஓய்விலிருக்கும்போது ஒரு மனிதன் நிமிடத்திற்கு 13 முதல் 17 முறை சுவாசிக்கிறன். விளையாடும்போது 80 தடவை வரை அதிகரி க்கின்றது. ஒரு நாளில் சராசரி  21600 முறை சுவாசிக் கிறோம்  . இது வாழ்நாளில் 295.261 மில்லி.லி அளவாகும். தாயின் வயிற்றில் பிறந்த அதிர்ச்சியில் குழந்தைக்கு
முதல் சுவாசம் ஏற்படுகிறது. தசைகள் சுருங்கி, மார்பு  விரி ந்து உள்ளே காற்றழுத்தம் குறைகிறது. திணறிப்போன குழந்தை வாயைத் திறக்கிறது. காற்று உள்ளே விரைகிறது.
குழந்தை முதல் மூச்சை விடத்தொடங்கி நிமிடத்திற்கு 60 தடவை சுவாசித்து மூச்சுவிடும் பேராட்ட சுழற்சி ஆரம்பிக்கிறது. வளர்ச்சி அடைந்த ஒருவரி ன் சுவாசப்பைகளின் உள் அளவு 93 மிமீ2 . இது மனித உடம்பின் வெளிப்பரப்பின் 40
மடங்காகும்

மனித மூளையும் அதன் ஆற்றலும்


ஒரு மனித உடலில் நாளொன்றுக்கு 27949.3 மீட்டர் ரத்தம் 99776.6 கி .மீ நீளமுள்ள
ரத்தக்குழாய்கள் வழியாகச் செலுத்தப் டுகின்றன. ஒரு மனிதன் சராசாp வாழ்நாளில் இதயத்தின் தசைகள் இயங்கும் (ம்ப்செய்யும்)
ரத்தத்தின் அளவு சந்திரமண்டலத்திற்கு செல்லும் 56 ராக்கெட்டுகளில் நிரப்பப்படும் எரி பொருள் அளவாகும்.
பிறதசைகள் போலன்றி இதயத்தின் தசைகள் தன்னிச்சையாக செயல்படுகின்றன. கருவில் குழந்தை நான்குவார சிசுவாக இருக்கும்போத
நரம்புகள் தோன்றுவதற்கு முன்பே சிசுவின் உடம்பிற்கு வெளியே உப்பு நீரில்  மிதந்து கொண்டு இதயம் துடிக்கத் தொடங்குகின்றது
MYOCYTER என்ற தசை செல்கள் சுமார் 2 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து இதயத்தை இயக்க வைக்கின்றன. குழந்தை பிறந்ததும் இந்த செல்கள் பெருகி வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன.

முனிதனின் மூளை 1.36 கிலோ எடையுள்ளது. சுமார் 100 தில்லியன் ( ஒரு தில்லியன் என்பது ஒன்றிற்குப் பின் 18 பூஜ்ஜியங்கள் கொண்டதாகும் ) செய்தித் துணுக்குகளை சேகரித்து  வைக்கும் திறன் கொண்டதாகும்.
அதாவது 70 ஆண்டுகளில் அது சேர்க்கும் செய்திகள் பிரி ட்டானிகா கலைக்களஞ்சியத்தின் ஐந்து லட்சம் தொகுதிகளில் அடங்கக்கூடிய அத்தனை
தொகுதிகளை அடுக்கி வைத்தால் 71131 கிலோ மீட்டர் தூரம் வரும். அதன் சிறிய அளவு (1.3608 கிலோ) பயன்படுத்தும் சக்தி 20 வாட் பல்புக்குத் தேவையான மின்சாரம் மற்றும் அளப்பறிய சேமிப்பு திறன் 100 தில்லியன்
செய்திகளாகும்.
இவற்றைப் பார்க்கும்போது தற்போது நடைமுறையில் உள்ள கணக்கை விட அது சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரிய வருகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மூளை தனது சிறிய நினைவுப் பகுதியில் செய்திகளை நிரப்பிக்கொள்ளும். உடலின் நீளமான செல் நியூரான் (1.2 மீ). முழுவளர்ச்சியடைந்த மூளையில் 100 மில்லியன் நியூரான்கள் நரம்பு செல்கள் உள்ளன. ஆனால் நியூரான்கள் எண்ணிக்கைக்கும் மனித அறிவுக்கும் சம்பந்தம் இலலை. நியூரான்களுக்கு இடையே ஆன இணைப்பு பிறப்புகளுக்கு முன்பே துவங்கி 2 வயது வரை தொடர்கிறது. நியூரான் டிரான்ஸ்பர் மீட்டர் மூலம் செய்திகள் அனுப்பப் படுகின்றன. ஒரு நியூரான் செய்தியை அனுப்பியதும் மற்றெhரு நியூரானில் உள்ள ஆயிரக்கணக்கான செய்திகள் வாங்கப்பட்டு அது இன்னொரு நியூரானுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

Friday, February 10, 2012

அதிசயங்கள் !

இணையத்தில்  நான் கண்டெடுத்தது ...
நன்றி : ஈகரை 
 
1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தை யாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்பு களுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறு ப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செ ருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்;கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது ரூஹ் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிற க்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்ச னைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர் ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போ து தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இத னால் உயரம் குறைகிறது. இரவி ல் எவ்வித விறைப்புத் தன்மையு ம் இல்லாமல் படுத்து உறங்குவ தால் நமது உடம்பின் உயரம் கூடு கிறது.

7. நம் இரத்தத்தில்; சிவப்பணுக்க ளின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உரு வாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின் றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின் றன.

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சு மார் 40 முறை அந்தப் பக்கம், இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திரு க்கிறது.

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட் டை விரல்கள்.

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எ லும்பு.

14. மனிதமுளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதா கும்.

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.

16. நம் ஒடல் தசைளின் எண் ணிக்கை 630.

17. நம் உடலின் மொத்த எ டையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விட லாம்.

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் கா ற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக் கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவை ப்படுகிறது.

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடி கட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறு காய், உப்புக்கருவாடு, ஆல் கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது. கவ னிக்கவும்.

24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்க ளை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளை யில் இருக் கிறது.

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடை த்துவிடும்.

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உரு வம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது.

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானி க்கிறது.

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்ற லாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படு கிறது. கண் இமைகள் தான் நம் வைப் பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுர ப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெ ல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அல ம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பி களிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.

37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளரா மல் இருந்து உதிர்கிறது. அப்புற மாக புது கேசம் வளர்கிறது.

38. ஓர் அடி எடுத்து வைக்க உட லெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறா மை, கெட்ட சிந்தனை இவைக ளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.

40. நமது நரம்பு மண்டலம் தா ன் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்பு கிறது.

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்று ம் பேசும் வேகம் நிமி டத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிட ப்பட்டுள்ளது.

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனா ல் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க் கிறது.

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தை யும் உட்கொள்கிறோம்.

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்தி லும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன.

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.

50. மனித உடலில் 50 லட்சம் முடிக் கால் கள் உள்ளதாகவும், பெண் களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவா னது என் றும் அறியப்படுகிறது.

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்க ளில் தூங்கி விடுகின் றான்.

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென் டி மீட்டர்.

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தை களைத்தான் பயன்படுத்து கிறார்கள்.

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.

56. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.

57. மனிதனின் உடலிலுள்ள குரோ மோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)

58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைக ளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவ தும் வளரும்.

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இர த்த சிவப்பணுக்கள் உள்ளன.

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச் சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகி றோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண் ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக் கும்.

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.

69. உடலில் உண்டாகும் உஷ் ணம் வெளியேறிவிடாமல் தடு க்கவே ரோமம் உள்ளது.

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனித னுக்கு கோபம் வருகிறது.

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6கிராம் ஆகும்.

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதி கமாக நீரை சுரக்கத் தொடங்கி விட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற் படும்.

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன.ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் காவல் துறை யில் வேலை.

76. நம் இதயத்தின் எடை 10 அவு ன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.

77. நம் நுரையீரலில் உட்புறம் அமை ந்துள்ள ‘ஆலவியோலி’ என் னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டுட் 30 கோடி யாகும் புகைப்பிடித்தல் கூடாது.

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.

80. மனிதனுக்கு 3 வகை யான பற்கள் உண்டு.

81. நமது நாக்கில் சுவை உண ரும் மொட்டுக்கள் 9000 உள் ளன.

82. நம் ஒவ்வொரு கண்ணி லும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டு மே 8 பில்லியன் செல்களால் உரு வானது.

85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவ ள் சுமார் 3-½ லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனி ல் 10 லட்சம் நிரப்பலாம்.

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கி றது. வரு~த்திற்கு 4கோடி தட வை. உங்க வயசை 4கோடியால் பெருக்கிப் பாருங்கள்.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக் குச்சிகள் செய்யலாம்.

92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொ ண்டு 7 பார் சோப்புகளை செய்ய லாம்.

94. மனித உடலின் இரும்பைக் கொண் டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.

95. மனித உடலில் அதிகமாக காணப் படும் தாதுப்பொருள் கால் சியம்.

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட் டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட் டா…வி விடுகிறோம்.

98. மனிதன் 21 வயது முடிவதோடு உட லின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அள விற்கு வளர்ச்சி.

99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கை களில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. இரண்டையும் கூட்டினால் 99 .

100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனி தன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவ தாக கண்டறியப்பட்டுள் ளது. இந்நிலை யில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந் தால் எவ்வளவு காலம் வாழ் நாளில் வீணாகும் என்பதை எண்ணிப் பார் க்க வேண்டும்.

Friday, January 20, 2012


சர்க்க்கரைநோய்க்கு தொடர் பரிசோதனை அவசியம்.
“இனிப்பு சாப்பிடுவதில்லை,காபிக்கு சர்க்கரை போடுவதில்லை.ஆனாலும் எனக்கு சர்க்கரை குறையவில்லையே டாக்டர்..”என என்னிடம் வந்து ஒருவர் கேட்டார்.
வேற என்ன சாப்பிட்டீங்க ன்னு நான் கேட்க…தூக்கி போட்டார் பாருங்க ஒரு குண்ட… பொங்கல்,ஊத்தப்பம்,4 இட்லி,சர்க்கரை போடாமல் காபி..என்று சொன்னார்.
சர்க்கரை,இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமாய் இருப்பதைக் குறிக்கும். குளுக்கோஸைத்தான் தமிழில் சர்க்கரை என்கிறோம்.சர்க்கரை ஏறாவிட்டால்
உடம்பில் சர்க்கரை ஏறாது என்று நினைக்கிறார்கள்.மாவு சதது; நிறைந்த பொருட்கள் அதாவது தானியங்கள் அதிகமாக சாப்பிடுவதால் உடம்பில் சர்க்கரை அதிகமாகிறது.
அதாவது அரிசி, கோதுமை, ராகி,மக்காச்சோளம், கம்பு, மைதா, சோளம், ஓட்ஸ், ரவை, சேமியா போன்றவற்றிலிருந்து தாயாரிக்கப்படும் எந்த உணவும ; சர்க்கரையை அதிகப்படுத்தும்.இந்த தானிய உணவுகளை அதிகமாக உட்கொள்ளும ; போது, ஜீரணமாகும் சக்தி குறைந்து விடுவதால் அதாவது அவற்றை சக்தியாக மாற்றுவதற்கு அதிக அளவு இன்சுலினை உடல் சுரக்க வேண்டியிருக்கிறது.; ஆனால ; சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் குறைபாடு இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி இரத்தக்குழாயில் படிந்து சில ஆண்டுகளில் அடைத்துவிடுகிறது.

பெரிய இரத்த்தக்கு;குழாய் அடைப்ப்பால் உண்ட்டாகும் அறிகுறிகள்:;:

கால் எரிச்சல்,மதமதப்பு,பஞ்சு மேல் நடப்பது,ஊசி குத்துவது போன்ற உணர்வுகள். கால் புண், கொப்புளங்கள், நடந்தால் நெஞ்சு வலி, மூச்சிறைப்பு, படபடப்பு, கால் கை ஒரு பக்கம் மறத்துபோதல், பக்கவாதம்,சமநிலையின்மை,தலைசுற்றல, மயக்கம்,போன்றவை.

சிறிய இரத்த்தக்கு;குழாய் அடைப்ப்பால் உண்ட்டாகும் அறிகுறிகள்:;:
கண்பார்வை மங்குதல், கண்வலி, இரட்டை பார்வை, அடிக்கடி கண்கட்டி, கால் முகம் வீங்குதல், வாந்தி, சிறுநீரில் புரதம் ஒழுகுதல்.போன்றவை.
சர்க்கரை மட்டுமல்லாது,உப்பு,கொழுப்பு சத்து அதிகமானால் இரத்த குழாயில் அடைப்பு எற்படும்.மேலும் புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், டென்சன், உடற்பயிற்சியின்மையாலும் இரத்த குழாயில் அடைப்பு எற்படும்.

சர்க்க்கரையை குறைக்க்க என்ன்ன செய்ய்ய வேண்டும்?
;ஐந்து இட்லிக்கு பதில் மூன்று இட்லி,அத்துடன் காய்கறி,பருபபு; ,மதியம் மூன்றில் ஒரு பங்கு சாதத்தை குறைத்து கீரை பருப்பு சாப்பிட வேண்டும். இரவு சப்பாத்தியை ஒன்று, இரண்டு குறைத்து பருப்பு வகையை சேர்த்து சத்து உணவாக சாப்பிட வேண்டும்.

உடற்ப்பயிற்சி
ரத்தத்தில் அதிக அளவு இருக்கும் குளுக்கோஸ் சக்தியாக மாறுவதற்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். நோயாளியின் பொதுவான உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிறச்  திட்டத்தை வகுத்து டாக்டர் உதவுவார். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது முக்கியமானதாகும்.
உடற்பயிற்சி வாழ்நாளை 10 முதல் 15 ஆண்டுகள் அதிகரிக்கும,; இருதயத்தை வலுப்பெற செய்யும்.ரத்த குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகரித்து ரத்த குழாய் அடைப்பை நீக்குகிறது.
நீங்கள் நல்ல உணவுக்கட்டுப்பாட்டிலதான் இருக்கிறீர்கள்..நன்றாகத்தான் உடற்பயிற்சியும் செய்கிறீர்கள்..என்றாலும் ….சர்க்கரை…..குறையவே இல்லையே? டாக்டர்… .என்கிறீர்களா?
நீங்கள் சரியாகத்தான் இருப்பீர்கள்,ஆனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரை
பொருத்தமானதாக இருக்க வேண்டும். அது என்ன மாதிரியான பொறுத்தமான மாத்திரை என்பதை உங்களை சோதிக்கும் சர்க்கரை நோய் மருத்துவரால் மட்டுமே கணிக்க முடியும். மாதமாதம் சர்க்கரை பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மட்டும் சிகிச்சையல்ல. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்தால் தான் சர்க்கரை கட்டுப்பாட்டின் உண்மை நிலை தெரிய வரும்.

தொடர் சிகிச்சை:
சாக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும்
சிறுநீரக,கண், மற்றும் கால் பரிசோதனைகளை, குறைந்த பட்சம் வருடத்திற்கு
ஒருமுறையாவது அவசியமாக செய்ய வேண்டும்.
ஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச்சொல்லி காசு பிடுங்குகிறார் என்று ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும், சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிசின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.

“எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர
வேண்டும்?? என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார ; ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது அவர் என்ன செய்வது டாகட் ர்..? என்று என்னிடம் ஒடி வந்தார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் எவ்வளவு பாதிப்பு வரும் என்று பல நோயாளிகளுக்குத் தெரிவதில்லை. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும், இப்படி அதி தீவிரமான பொருளாதார சிக்கலில் கொண்டு போய் தள்ளிவிடும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

அடுத்து சர்க்கரை நோயால் பாதிக்கும் இன்னொரு முக்கியமான உறுப்பு கால். கால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி (நன்கு படித்தவர்த்தான்..என்ன செய்வது) ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.
கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால ; ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசிவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள 10000 வரை செலவு ஆகும்.
அடிக்கடி செக் அப் செய்துகொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு பணம் கொடுத்தாலும்,உங்கள் நலத்தை மீட்டுக்கொண்டு வர முடியாது. ஏனென்றால் உங்களது உடல்நலம் உங்களை விட உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. ஆகவே சர்க்கரைநோயி;ன் பாதிப்புகளிலிருநது; மீள்வதற்கு உடனே விழித்துக் கொள்ளுங்கள்.
மாதம் ஒருமுறை மருத்துவரை சந்தித்து சர்க்கரை,இரத்த அழுத்தம்,எடை சரியாக உள்ளதா? என்று கண்காணிக்க வேண்டியது அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு பின்விளைவுகள் வரும் வாய்ப்பை அறிந்து தடுத்துக் கொள்ளலாம்.மாதம் இருமுறையாவது டாக்டரிடம் பரிசோதனைக்கு செல்பவர்களுக்கு சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதும், அவரது ஆலோசனைப்படி உணவு, உடற்பயிற்சி, மாத்திரைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

டாக்டர் சர்க்கரையை மட்டும் பார்ப்பதில்லை.எடை, ரத்த அழுத்தம், கொழுப்பு,
ரத்தக்குழாய் அடைப்பு, சர்க்கரைக்கான் அறிகுறிகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ற சிகிச்சை அளிப்பார்.

உடல் பருமன் உயிருக்கு எமன்

உடல் பருமன் என்ற்றால் என்ன?
உடல் பருமன் என்பது தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையைக் குறிக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவு நமது உடல் செய்யும் வேலை இந்த இரண்டுக்கும்
இடையேயான வரவு - செலவு கணக்கில் ஏற்படும் சமமின்மையே உடல் எடை
அதிகரிக்க காரணம். நம் உணவில் எடுத்துக் கொள்ளும் கலோரித்திறன் அதிகமாக இருந்து, நமது உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால் காலப்போக்கில் படிப்படியாக உடல் பருமனாகிறது.
உணவு கிடைக்காத போது சமளிப்பதற்காக அதிகமாக உணவு கிடைககு; ம் போது அதை கொழுப்பாக மாற்றி உடல் டெபாசிட் செய்து கொள்ளும். ஆதி மனிதனுக்கு அவசிய தேவையாக இருந்த இந்த தந்திரம் இன்று நமக்கு ஆபத்தாகி விட்டது.
இப்போது உடலின் தேவைக்கு சற்று அதிகமாக உணவை உட்கொண்டால் கூட அது கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.

உடல் பருமனை அளவிடுவது எப்ப்படி?
சராசரி அளவைவிட பெரிதாக இருப்போரை பருமனாக இருப்பதாக குறிப்பிடுகிறோம். உடல் பருமனை அளவிட உடல் எடை குறியீட்டு எண் (BMI)
என்ற முறையைப் பயன்படுத்துகின்றனர். இது ஒருவரது உயரம் மற்றும் எடையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த அளவை சுருக்கமாக பி.எம்.ஐ எனக் குறிப்பிடுகிறோம்.
பி.எம்.ஐ 18.5-க்கு கீழ் சென்றால் அவர் குறைந்த எடை உடையவர். அதுவே 25-க்கும் அதிகமானால் அதிக எடை என்கின்றனர். 30-க்கும் மேல் என்றால் பருமன். 40-க்கும் மேல் என்றால் ஐயோ! குண்டு பூசணிக்காய் தான், இந்தியர்களை பொருத்தவரை பி.எம்.ஐ 23-க்கு அதிகமாக இருத்தாலே அதிக எடை என்று அறிவிக்கப்படடு; ள்ளது.

இந்தியர்களுக்கு தொப்பைதான் பெரிய எதிரி.
உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பின்படி உலகில் 100 கோடி பேர் அளவுக்கு
அதிகமான எடையுடன் உள்ளனர். 30 கோடி பேர் உடல் பருமனால் பதிக்கப்பட்டுள்ளனர். அதிக எடையும் உடல் பருமனும் ஏராளமான நோய்களைக் கொண்டு வருகின்றன.
சக்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மூட்டு நோய்கள், சிலவகை புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

உடல் பருமன் ஏன்?
சக்கரை, கொழுப்பு, உப்பு போன்றவற்றை அதிகம் கொண்ட அதிக கலோரி சத்தும், குறைவான ஊட்டச்சத்தும் கொண்ட உணவு வகைகள் தான் இன்றைய உடல் பருமன் சிக்கலுக்குக் காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
துரித உணவுகள், நொறுக்குத் தீனி வகைகள், மென்பானங்கள் ஆகியவைதான் இன்றைய இளம் தலைமுறை உடல் பருமனுடன் இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகின் மொத்த இறப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1 கோடி 66 லட்சம் இறப்புகளுக்கு இதயம் தொடர்பான நோய்களே காரணமாகின்றன. இந்த ஆபத்துக்கு காரணமாக இருப்பது முறையற்ற உணவு பழக்கம்தான்.
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பழக்கம் ஒருபுறம், உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி பெட்டிகளின் முன ; அதிக நேரத்தைச் செலவழிப்பது மற்றொருபுறம். இந்த இரண்டும் சேர்ந்து உடல் பருமனுக்கு வழி செய்கிறது.
அமெரிக்காவில் 65 சதவீதத்தினர் அதிக எடையுடன் காணப்படுகின்றனர். இதற்கான மருத்துவச் செலவுகளுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.4,600 கோடி செலவழிக்கப்படுகிறது.
நாமும் அந்த ஆபத்தான நிலையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம்.
உணவில் இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று ருசி. இன்னொன்று சத்துக்கள்.
ஆனால் நாகரிக உலகில் ருசி எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக ; கொண்டதால் சத்துக்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.
எடை கூடுவது எப்படி: ஒரே நாளில் எடை கூடி விடுவதில்லை. கொஞச் ம் கொஞ்சமாகக் கூடுகிறது. தொடக்கத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரளவுக்கு மேல் பிரச்சனையான பிறகு தான், "ஐயோ" என்று அலறுகிறார்கள். உடல் நலபாதிப்பு அல்லது உடல் அழகு கெடும்போது தான் எல்லோரும் விழிக்கிறார்கள். அப்போதும் கண்டுகொள்ளாதவர்களும் உண்டு.
உடல் எடை கூடுவதால் அழகு மட்டும் கெடுவதில்ல. பல்வேறு நோயக் ளுக்கும் அது காரணமாகிறது. செக்ஸில் நாட்டம் குறையும்: உடல் எடை கூடுவதால் தாம்பத்திய உறவுக்குப் பங்கம் ஏற்பட்டு குடும்ப உறவுகள் பதிக்கப்படும் அபாயம் உள்ளது. உடல் எடை, அளவுக்கு அதிகமாகும் போது வழக்கமான செக்ஸில் ஈடுபட முடியாது. ஆர்வம ; இருக்கும், ஆனால்
உறவில் ஈடுபடும்போது உடல் ஒத்துழைக்காது. இதனால் துன்பமே மிஞ்சும்.
உடல் எடை அதிகமான பின் அதைக் குறைக்க கஸ்டப்படுவதை விட, எடை
கூடிவிடாமல் உடல் எடையை பராமரிப்பதே சிறந்தது.உடல் எடை,சர்க்கரை நோயின் வருவதற்கு ஒரு முக்கியமான காரணியாக அமைவதால்,நாம் நமது உடல் எடை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.