சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

மன அழுத்தமும் சர்க்கரை நோயும்



மன அழுத்தமும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணியே..

இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் சர்க்கரை நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய இளைஞர்களில் பலர் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். உடல் வளைந்து வேலை செய்வதில் அவர்களுக்கு நாட்டமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே எவரெஸ்ட் உச்சி வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். பலர் இரவு பகல் பாராமல் கணிப்பொறியின் முன்னாலேயே வாழக்கையை ஒட்டுகிறார்கள். சூரியன் முளைத்த பிறகு தூங்கி, மறைந்த பிறகு விழிக்கிறார்கள். இதனால் உறக்கம் கெடுகிறது. உடலின் சகஜ நிலை மாறுதல் அடைகிறது. மன அழுத்தம் அதிகக்கிறது. கடிதம் போடாமலேயே சக்கரை நோய் வந்து உடலோடு ஒட்டிக்கொள்கிறது.
மருத்துவ ரீதியில் சக்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் என்பது மிக முக்கிய காரணியாக இருக்கிறது, உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் எனது நண்பர் ஒருவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. அவரின் முன்னோர்களுக்கோ. அவர் குடும்பத்தில் மற்றவருக்கோ சக்கரை நோயே கிடையாது. ஆனால் அவருக்கு அது வந்து பெரும் தொல்லை தருகிறது. இதற்கு அதிகபடியான மன அழுத்தமே அவருக்கு வந்த நோய்க்கு காரணம்.
அவருக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் என்ற எந்த பிரச்சனையும் இல்லை. அவர் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும் என்ற கடமைகளும் இல்லை. உண்பதற்கு சோறும், உடுப்பதற்கு ஒரு முழு துணியும் இருந்தாலே அவர் தேவைகள் பூர்த்தியாகி விடும்.

பிறகு எங்கிருந்து வந்தது அவருக்கு மன அழுத்தம?;,
இரண்டாயிரம் ஆண்டு துவக்கத்தில் ஒரு சொந்த வேலையின் காரணமாக பல லட்ச ரூபாய் கடன் அவர் தலை மீது விழுந்தது. நம்பிக்கை நாணயம் கெடாமல் 2006-க்குள் அதை அடைத்து முடிப்பதற்கு அவர்; அனுபவித்த கஸ்டங்களை வெறும் வார்த்தைகளால் எழுதி விட முடியாது. கடன். வறுமை என்பவைகளின் முழுமையான அர்த்தம் அவருக்கு அப்போது தான் தெரிந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட மன அழுத்தமே அவர்; உடலில் பல நோய்களை உண்டாக்கியது அல்லது வரவழைத்தது.

அவர்; அனுபவித்த கஸ்டங்களை விட பல மடங்கு கஸ்டங்களையும் மன உளைச்சலையும் இன்றைய இளைஞர்கள் ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள் என்பது யதார்த்தமாகும். குருவி தலையில் பனங்காயை வைத்தது போல வயதாலும் அனுபவமின்மையாலும் நமது இளம் தலைமுறையினர் சுமைகளை சுமக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் மனமும், உடலும் பாதிப்படைகிறது. இது மட்டுமலல நாகரீகம் என்ற போர்வையில் நமது தேச பருவகாலத்திற்கு ஒத்து வராத பழக்க வழக்கங்களையும் உணவு முறைகளையும் ஏற்படுத்தி கொண்டும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பல நோய்களில் மிக முக்கியமானது சக்கரை நோய்.
உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் இருப்பதாலும் உடல் அசைவுகளை இயற்கைக்கு மாறாக அடக்கி வைப்பதனாலும் உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு இல்லாததினாலும் இதய பலகீனத்தாலும் இளம் வயதினருக்கு சர்க்கரை நோய் என்கின்ற இனிப்பு வியாதி சொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.ஆகவே இதிலிருந்து மீள்வதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அதை நம் இளைஞர்கள் கடைபிடிப்பது நல்லது.

No comments:

Post a Comment