சர்க்கரை நோய்

Loading

Friday, March 18, 2011

உணவு பழக்கம்


 சமுதாயத்தின் உணவு பழக்கம் மாற வேண்டும்
தானிய உணவை குறைத்தால் மட்டுமே சர்க்கரை நோயை வெல்ல முடியும்;.
சர்க்கரை என்று நாம் குறிப்பிடுவது அனிப்பான சீனி, அஸ்கா,சர்க்கரை அல்ல.கார்போஹைட்ரேட் என்று சொல்லக் கூடிய மாவுச்சத்து தான், உதாரணம்: இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவற்றில் இருக்கும் தானியங்களான அரிசி,ராகி,கோதுமை,கம்பு,சோளம் இவற்றில் உள்;ள மாவுச்சத்தை தான் நாம் சர்க்கரை என்று கூறுகிறோம்,இந்த மாவுச்சத்துதான் குளுக்கோஸாக மாற்றப்படுகிறது.
தனியாக தானிய உணவு எதை சாப்பிட்டாலும் சர்க்கரையாக மாறும்.தானிய உணவு ஜீரணமாகி சக்தியாகி  மாறவும் இன்சுலின் அவசியம்.தானியம் மட்டும் சாப்பிட்டால் இன்சுலின்  அதிகமாக சுரககும். சர்க்கரை அதிகமாகும்.வேகமாக ஜீரணமாகும் உணவுகளான கஞ்சி,களி,கோதுமை தோசை போன்றவை சர்க்கரையை இரத்தத்தில் மிக வேகமாக அதிகப்படுத்தும்.மூன்று வேளையும் தானியமாக  சாப்பட்டால் சர்க்கரை அதிகமாகும்.
உதாரணத்திற்கு, இந்தியாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தானிய உணவை அதிகமாக சாப்பிடுகிறோம்.சர்க்கரை இல்லாதவர்கள் கூட தானியங்களை அதிகமாக சாப்பிடும் போது இன்சுலின் சுரப்பும்,இன்சுலின் தேவையும் அதிகமாகும்.எதிர்காலத்தில் சர்க்கரை வரும் வாய்ப்பு உன்னது. இப்Nபுhது உள்ள தானிய உணவை 3 ல் ஒரு பங்கு குறைத்து பருப்பு,பயறு,பழங்கள்,காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்த சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒய்வில் சிறிது மாற்றம் செய்தாலே போதும்..
இதுவரைக்கும் நம் வீட்டு இட்லிக்கு,மாவரைக்கும் போது,அரிசி அதிகமாகவும்,உளுந்து குறைவாகவும் போட்டிருப்போம்.இனிமேல் மாவு ஆட்டும் போது உளுந்து வெந்தயம் அதிகப்படுத்தி அரிசியை குறைக்கவும்.
சப்பாத்தியில் இனி கோதுமை அளவைக் குறைத்து பருப்பு அல்லது சோயா மாவு சேர்ககவும்.
பொங்கள் செய்யும் போது பாசி பருப்பை அதிகப்படுத்தி,அரிசியைக் குறைக்கவும்.
மதியம் நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் சாதத்தை குறைத்து பருப்பு காய்கறி அதிகம் சேர்த்து சாப்பிடவும்.

No comments:

Post a Comment