சர்க்கரை நோய்

Loading

Tuesday, November 16, 2010

ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்கிறார்களே அது உண்மையா? எப்படி கட்டுப்படுத்துவது?


 ‘‘ஆம். ஆரம்பகால சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியும் என்பது உண்மைதான்.
இதற்கு ப்ரீ டயாபடீஸ் அல்லது பார்டர் லைன் டயாபடீஸ் என்று பெயர். இதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டு செயல்பட்டால் குணப்படுத்திவிடலாம். எப்படி தெரிந்து கொண்டு குணப்படுத்த முடியும் என்கிறீர்களா?
குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, வெறும் வயிற்றில் இருக்கும் போது உங்களின் இரத்த சர்க்கரை அளவு 100க்கு மேல் 125 க்கு கீழ் இருக்க வேண்டும். 125க்கு மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி என்றும் 100 க்கு மேல் இருந்தால் ஆரம்ப கால சர்க்கரை வியாதி என்றும் தெரிந்துகொள்ளலாம்.
இது ஐகுபு முறை. அதுவே ஐபுவு முறை என்றால் குளுக்கோஸ் சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சர்க்கரையின் அளவு 140 மேல் 200 கீழ் என வரையறுத்துக் கொண்டால், 200  மேல் இருந்தால் முழுமையான சர்க்கரை வியாதி இருக்கிறது என்றும் 140 க்கு மேல் இருந்தால் ஆரம்ப நிலை சர்க்கரை வியாதி என்றும் புரிந்து கொள்ளலாம்.
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆரம்பநிலை சர்க்கரை வியாதியை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைகுறைத்தல், அதி நவீன மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால், முழுமையான சர்க்கரைவியாதியை குணப்படுத்தமுடியாது. கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்துக் கொள்ள முடியும்.
குறிப்பாக பரம்பரைத் தன்மை, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யாதது. உடல் பருமன், மன உளைச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால்தான் ஆரம்பநிலை சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. மேலும் ஆரம்ப நிலைதானே என்று சாதாரணமாக எண்ணவேண்டாம். ஏனெனில், இதன் மூலம் இதயபாதிப்புகளால் நரம்பு, கண் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment