சர்க்கரை நோய்

Loading

Tuesday, November 16, 2010

யாருக்குப் பரிசோதனை அவசியம்?

உங்களுக்கு வயது 45ற்கு மேல் என்பதுடன் உங்கள் எடையும் அதீதமானது எனில்  உடனடியாகச் செய்து பார்ப்பது அவசியம். எடை சரியான அளவில் இருந்தால் கூட அடுத்த முறை மருத்துரிடம் செல்லும்போது எடையைப் பற்றிக் கலந்தாலோசியுங்கள்.இன்று பலரது எடைகளும் அதீதமாக அதிகரித்து வருகிகறது.இதன் காரணமாக  எடை அதீதமாக உள்ளவர்களுக்கு பிரஸர், குருதியில் அதிகரித்த கொலஸ்டரால், அதிகரித்த ரைகிளிசரைட்  அளவு, போன்றவை இருந்தால் 45 வயது வiர் காத்திருக்காது சந்தேகம் ஏற்படும் போது மருத்துவர்கள் நாட வேண்டும்.
இதைத் தவிர தமது பரம்பரையில் நீரிழுவு உள்ளோர், கர்ப்பமாயிருக்கும்போது நீரிழிவு வந்த பெண்கள் ஆகியோர் காலம் தாழ்த்தாமல் சர்க்கரை நோய்க்கான மருத்துவரை நாடுவது நல்லது.

எப்படித் தடுப்பது?


உங்களுக்கு நீரிழிவின் முன்நிலை இருக்குமாயின் அது நீரிழிவு நோயாக மாறாமல் தடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.
• வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் குருதியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது
• மருந்துகள் உட்கொள்வதன் மூலம் செய்வது.

வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பன எவை?


 உணவு முறையில் மாற்றங்கள் செய்தல்,
 எடையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல்.
அது முடியாவிட்டால் குறைந்தது தமது எடையில் 5முதல் 10 சதவிகிதம் வரை குறைக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்தல். தினசரி முடியாவிட்டால் கிழமையில் 5 நாட்களுக்காவது 30நிமிடம் செய்ய வேண்டும். துரித நடைப் பயிற்சி நல்லதாகும்.
இவற்றை ஒழுங்காகக் கைக்கொண்டால் அவருக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு 43 சதவிகிதத்தினால் குறைகிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இதில் முக்கியமான வி~யம் என்னவெனில், வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடிக்கின்ற காலம் வரைதான் நீரிழிவு வருவதற்கான சாத்தியம் குறையும் என்பதில்லை. அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட அது நீடிக்கிறது.
உதாரணமாக இந்த ஆய்வு ஏழு வருடங்களுக்குச் செய்யப்பட்டது. வாழ்க்கை முறை மாற்றங்களைக் கடைப்பிடித்த அந்த நான்கு வருடங்களுக்கு மட்டுமல்ல அவற்றைக் கைவிட்ட பின்னரும் கூட மேலும் 3 வருடங்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு குறைந்திருந்தது என்பது நம்பிக்கை அளிக்கும் முடிவாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயற்படுத்த முடியாதவர்களுக்கும் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தும் குருதியில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியாதவர்களுக்கும் மருந்துகள் உதவக்கூடும்.

No comments:

Post a Comment