சர்க்கரை நோய்

Loading

Tuesday, November 16, 2010

அடுத்து மிக முக்கியமான காரணி நாம் உண்ணும் உணவு முறை


அதிக கலோரிகள் உள்ள உணவை உண்ணும் சமூகத்தில் நீரிழிவு நோய் பரவலாகக் காணப்படுகிறது.
கலோரிகள் குறைந்த எளிய உணவையே எப்போதும் உட்கொள்பவர்களுக்கு இந்நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உணவுத் தட்டுப்பாடு இருந்ததால் எளிய உணவையே மக்கள் உண்டு வந்தனர். இந்தக் கால கட்டத்தில் புதிதாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்ததாம்!
கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
மன அழுத்தம்
மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
மன அழுத்தத்தால் உடலில் பல்வேறு இயக்க நீர் மாற்றங்கள் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருதய நோய்கள், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கும் கூட மன அழுத்தமே முக்கியமான காரணமாக அமைகிறது.
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து எதையாவது கொறித்துக் கொண்டே இருப்பார்கள். முக்கியமாக சாக்லேட், சிப்ஸ் போன்றவை. இதனால் உடல் எடை அதிகமாவதும் நீரிழிவு நோய்க்கு ஒரு காரணமாகிறது.
உடல் உழைப்பு இல்லாமை.
ஓடியாடி உழைப்பவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகம் வருவதில்லை.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வருகிறது.
போதைப் பொருட்கள்
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
பாரம்பரியம்
நீரிழிவு நோய் முழுக்க முழுக்க ஒரு பரம்பரை நோய் என்பது இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் பரம்பரையில் எவருக்கேனும் இருந்தாலும் அந்தக் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு கணிசமாக உயர்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
யார், யாருக்கு சர்;க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்? சுருக்கமாகச் சொல்கிறேன்.
பரம்பரையில் இந்நோய் உள்ளவர்களுக்கு
உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு
ஆண்களை விட பெண்களுக்கு
இளைஞர்களை விட முதியவர்களுக்கு
ஆண்களில் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு
பெண்களில் கல்யாணம் ஆகி குழந்தை உள்ளவர்களுக்கு
அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு
எடை அதிகமான குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு
மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு
போதைப் பொருட்களுக்கு அடிமை யானவர்களுக்கு.

No comments:

Post a Comment