சர்க்கரை நோய்

Loading

Tuesday, November 16, 2010

எப்படி தெரிந்துக் கொள்வது?

சக்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை! ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!! சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!! இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்! அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது? என்ற கேள்வி எழும்!! அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!! அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ஆம் உள்ளது என்பதுதான் பதில்!! அந்த சோதனையின் பெயர் என்ன? அந்த சோதனையின் பெயர் ர்டி யு1உ இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.
இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின் உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால்அதிகமாகவும் குறைய சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்! இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!
இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.
2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7மூ-8மூ- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!
3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!
4.பத்துக்கு மேல்-,10மூ - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!! ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என நம்பிக்கை கொண்டேர்ரும் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!

No comments:

Post a Comment